மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஓடிடியில் வெளியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரின் புதிய படம்!

டியர் ரதி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image
Updated On :4 மார்ச் 2026, 10:37 am

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம் சரவண விக்ரம் நடிப்பில் வெளியான டியர் ரதி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சரவண விக்ரம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

இவர் டியர் ரதி என்ற படத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரியில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த டியர் ரதி படத்தில் சரவண விக்ரமுடன் ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரவீன் கே. மணி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மோகனா மஞ்சுளா தயாரித்துள்ளார்.

டியர் ரதி திரைப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Summary

The movie Dear Rathi, starring Saravana Vikram of Pandian Stores series fame, is being released on the OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.