பிர்லா கார்பன் நிறுவனத்தின் சார்பில் குருவாட்டுச்சேரியில் நலதிட்டங்கள் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பிர்லா கார்பன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் 18.79லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகள் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
பிர்லா கார்பன் நிறுவனத்தின் சார்பில் குருவாட்டுச்சேரியில் நலதிட்டங்கள் வழங்கும் விழா
பிர்லா கார்பன் நிறுவனத்தின் சார்பில் குருவாட்டுச்சேரியில் நலதிட்டங்கள் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பிர்லா கார்பன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் 18.79லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகள் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பிர்லா கார்பன் தொழிற்சாலையின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் குருவாட்டுச்சேரி ஊராட்சி வேற்காடு  கிராமத்தில் 11லட்சத்து 79ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், 7லட்சம் மதிப்பீட்டில்  உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை ஊராட்சி மக்களுக்கு ஒப்படைக்கும் பணி வேற்காடு கிராமத்தில் பிர்லா கார்பன் நிறுவனத்தின் உட்கட்டமைப்பு திட்டங்களின் இயக்குனர் டாக்டர் சன்ட்ரூப்ட் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு பிர்லா கார்பன் நிறுவன தலைமை அதிகாரி ஜெனா, மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் பி.எல்.தாஸ், பொறியியல் தலைவர் புருனெந்து குமார், மனிதவளத் துறை நிர்வாக மேலாளர் ராஜன் ஜெகந்நாதன், நீர் மேலாண்மை துறை தலைவர் பிரகாசம், குருவாட்டுச்சேரி ஊராட்சி தலைவர் கோமதி சேகர், துணை தலைவர் துளசி மனோகரன் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி எஸ்.ரித்து மற்றும் பிர்லா கார்பன் நிறுவன உள்கட்டமைப்பு திட்டங்களின் தலைவர் டாக்டர் சன்ட்ரூப்ட் மிஸ்ரா ஆகியோர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை திறந்தும், உடற்பயிற்சி மையத்தை திறந்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்மையம், மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்திட அறிவுறுத்தினர். 

விழா முடிவில் பிர்லா கார்பன் நிறுவன மனித வளத்துறை அதிகாரி பெர்ணான்டஸ் நன்றி கூறினார். பிர்லா கார்பன் நிறுவனத்தின் மூலம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மேம்பட உதவிகள், மகளிருக்கு தொழிற்பயிற்சி, 15க்கும் மேற்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்மையம், பள்ளிகளுக்கு கழிப்பறை, கணினிகள் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com