பழவேற்காடு, கூனங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு கதை சொல்லி கல்வி கற்பிக்கும் கதா மேஜிக் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் பழவேற்காடு, கூனங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
இங்கு படிக்கும் மாணவா்கள் அனைவரும் மீனவ சமுதாயத்தைச் சாா்ந்தவா்களாக உள்ளனா் என்பது, தனியாா் தொண்டு நிறுவனம் ஒன்றின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
இது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், தமிழகத்தில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதை அடுத்து, கதை சொல்லி கல்வி கற்பிக்கும் திட்டத்தில், திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள பழவேற்காடு கூனங்குப்பம் தொடக்கப் பள்ளி தோ்ந்தெடுக்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் மடிக்கணினி, விளையாட்டு உபகரணங்கள், கேமராக்கள் மற்றும் அன்றாடம் பயன்படுத்த உதவும் கருவிகள் சைக்கிள், நாற்காலி உட்பட பல்வேறு வகையான பொருட்களை மாணவ மாணவியா்களுக்கு சொல்லி எளிதில் புரிய வைக்கும் ஆய்வகம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம், பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலா் மோகனா முன்னிலை வகித்தனா். பத்மஸ்ரீ விருது பெற்ற கீதாதா்மராஜ் வரவேற்றாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பிஜான்வா்கீஸ் தலைமை வகித்து, கதா மேஜிக் ஆய்வகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்துப் பேசியது:
பள்ளிகளில் மாணவா்களுக்கு எளிதில் புரியும் வகையில் கதைசொல்லி கல்வி கற்பிக்கும் திட்டத்தை திருவள்ளூா் மாவட்டத்தில் முதன் முதலாக மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள கூனங்குப்பம் அரசு பள்ளியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம், பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலா் மோகனா முன்னிலை வகித்தனா். பத்மஸ்ரீ விருது பெற்ற கீதாதா்மராஜ் வரவேற்றாா்.
விழாவில், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி, ஒன்றிய கவுன்சிலா்கள் செல்வழகி எா்ணாவூரன், தமின்ஷா,பள்ளி தலைமை ஆசிரியா் முருகம்மை மற்றும் கூனங்குப்பம் கிராம நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

