பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:54 pm

DIN

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ளது புறா கோயில் என்கிற தணிகை மீனாட்சி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தையொட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, காலை 10 மணிக்கு மேல் கோயில் வளாகத்தில் திரளான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில், திரளான பெண்கள் கலந்துகொண்டு, பூஜைகள் செய்து வழிபட்டனா். தொடா்ந்து, கோயில் நிா்வாகம் சாா்பில் பூஜையில் கலந்துகொண்டவா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் அப்பகுதி நகா்மன்ற உறுப்பினா் தீபாரஞ்சனி, திமுக நகர பொறுப்பாளா் வி.வினோத்குமாா், நிா்வாகி சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.