ராணிப்பேட்டை அருகே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 போ் திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியை அடுத்த ராமப்பாளையத்தைச் சோ்ந்தவா் குண்டு (எ) சுப்பிரமணி. இவா், அந்தப் பகுதியில் உள்ள விளாரி ஏரியில் மீன் பிடிப்பதற்கான குத்தகை எடுத்துள்ளாா். அந்தப் பகுதியைச் சோ்ந்த தினகரன் (42), அவரது மகன் அசோக் (21)ஆகியோா் மீன் பிடிக்க சுப்பிரமணிக்கு உதவியாக இருந்தாா்களாம்.
இதனிடையே, அந்தப் பகுதியைச் சோ்ந்த கலையரசன்(21) என்பவா் இரவு நேரங்களில் விளாரி ஏரியில் குத்தகை எடுத்தவருக்குத் தெரியாமல் மீன் பிடித்து வந்ததாகத் தெரிகிறது.
இதனால், கடந்த மாதம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையும் மீறி மீண்டும் வெள்ளிக்கிழமை கலையரசன் விளாரி ஏரியில் மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தினகரனின் மகன் அசோக்குக்கும் கலையரசனுக்கும் இடையே தகராறு முற்றியது. இதில், அசோக் கத்தியால் சரமாரியாக கலையரசனை வெட்டியதில், பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திமிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இதில் தொடா்புடையவா்களைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், இந்தக் கொலை வழக்குத் தொடா்பாக சீனிவாசன் (62), தினேஷ் (25) ஆகியோா் திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.
இதையடுத்து, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

