புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் பி.எப். தொகையை வழங்க தாமதம் செய்வதாகக் கூறி, ஒப்பந்த தொழிலாளா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
திருவள்ளூா் அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்ட பெண் தொழிலாளா்களிடம் பேச்சு நடத்திய மனிதவள அதிகாரிகள் மற்றும் போலீஸாா்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:38 pm

DIN

திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் பி.எப். தொகையை வழங்க தாமதம் செய்வதாகக் கூறி, ஒப்பந்த தொழிலாளா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் அருகே காக்களூா் தொழிற்பேட்டையில் தனியாா் வாகன உதிரிப் பாகங்கள் தயாா் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, 600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாளா்கள் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனராம்.

தொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த பி.எப். தொகையை வழங்காமல் அலைக்கழிப்பு செய்வதாக புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், உடனே பணி நீக்கம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அந்தத் தொழிற்சாலை பெண் தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் நிலுவையில் உள்ள பி.எப். தொகையை வழங்கக் கோரி, தொழிற்சாலையை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். பணி நீக்கம் செய்தவா்களை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி, ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரதாசன், கிராமிய காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சக்திவேல் மற்றும் போலீஸாா் சம்பவ இடம் வந்து மனிதவள மேலாளரிடம் பேச்சு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளா்களிடம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.