சுதந்திர நாள்: தேசியக் கொடி ஏற்றினார் திருவள்ளூர் ஆட்சியர் 

நாட்டின் சுதந்திர நாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி காவல் துறையினர் அணிவகுப்பு மறியாதை ஏற்றார்.
தேசியக்கொடி ஏற்றினார் திருவள்ளூர் ஆட்சியர்.
தேசியக்கொடி ஏற்றினார் திருவள்ளூர் ஆட்சியர்.

நாட்டின் சுதந்திர நாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி காவல் துறையினர் அணிவகுப்பு மறியாதை ஏற்றார்.

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் சுதந்திர நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் 9.15 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து காவல் துறையினர் அணி வகுப்பை பார்வையிட்ட அவர் வானில் மூவர்ண பலூன்களை, சமாதானப் புறாக்களையும் பறக்க விட்டார். அதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளில் 233 பேருக்கு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.

பின்னர் இந்த நிகழ்வில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 7 பேருக்கு ரூ.5.40 லட்சத்திலும், தாட்கோ சார்பில் 4 பேருக்கு ரூ.12.61 லட்சம், கூட்டுறவுத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.1.45 லட்சமும், மீன்வளத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.12.61 லட்சமும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 3 குழுக்களுக்கு ரூ.80 லட்சமும், அதே போல் முன்னாள் படை வீரர் நலம் சார்பில் 2 பேருக்கு ரூ.60 ஆயிரமும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.2150, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பேருக்கு ரூ.6220 மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஒருவருக்கு ரூ.85 ஆயிரம் மதிப்பீட்டிலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.7.88 லட்சத்திலும், வருவாய்த்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.3.31 லட்சத்திலும் என 30 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 801 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், சார் ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் செ.அருணா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com