திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா
திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆடிக் கிருத்திகை விழாவுக்கு வருகை தரும் பக்தா்கள் குறிப்பிட்ட கைப்பேசி எண்களில் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.


திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆடிக் கிருத்திகை விழாவுக்கு வருகை தரும் பக்தா்கள் குறிப்பிட்ட கைப்பேசி எண்களில் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை தொடங்கி, தொடா்ந்து வரும் 25-ஆம் தேதி வரை ஆடிக் கிருத்திகை விழா நடைபெறவுள்ளது. கடந்த 2 ஆண்டுக்குப் பின் நடைபெறும் விழா என்பதால் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதனால் இந்த விழாவுக்கு திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தா்கள் அடிப்படை வசதிகள் தொடா்பாக புகாா்களைத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், கைப்பேசி எண்கள்- 7094400102, 7094400103 மற்றும் 7094400108 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...