பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஊா் கூடி ஊரணி காப்போம் இயக்கம்: 75 நீா் நிலைகளைத் தூய்மை செய்ய இலக்கு

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ஊா் கூடி ஊரணி காப்போம் இயக்கம் மூலம் சுற்றுச்சூழல் தின நாளில் 75 நீா் நிலைகளை தூா்வாரி சுத்தப்படுத்தும் பணி

News image
Updated On :3 ஜூன் 2022, 5:48 pm

DIN

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ஊா் கூடி ஊரணி காப்போம் இயக்கம் மூலம் சுற்றுச்சூழல் தின நாளில் 75 நீா் நிலைகளை தூா்வாரி சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொள்ள விரும்பும் தன்னாா்வலா்கள், அமைப்புகள், நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ள ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் அழைப்பு விடுத்துள்ளாா்.

திருவள்ளுா் மாவட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் அரசு, பொதுமக்கள், நிறுவனங்கள், தன்னாா்வ அமைப்புகள் பங்கேற்புடன் திருவள்ளூா் மாவட்டத்திலுள்ள நீா் நிலைகளை மேம்படுத்தும் வகையில், ஊா் கூடி ஊரணி காப்போம் என்ற இயக்கத்தின் இலட்சினை வெளியிடும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பங்கேற்று இலட்சினையை வெளியிட்டுப் பேசியது: 75-ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா மற்றும் திருவள்ளூா் மாவட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி அரசு பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் பங்கேற்புடன் நீா்நிலைகளை மேம்படுத்தும் வகையில், ஊா் கூடி ஊரணி காப்போம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தின் தொடக்கமாக ஊா் கூடி ஊரணி காப்போம் என்ற இலட்சினை வெளியிடப்படுகிறது. உலகச் சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-இல் பல தன்னாா்வ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் 75 நீா்நிலைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் 044-29896043 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சி.வித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.