திருவள்ளூா்: நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் நோக்கில் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா்


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் நோக்கில் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கான ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளன. அதனால், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் பெற்றவா்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் அன்றைய நாளில் காலை 10 மணிக்கு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...