திருவள்ளூர்: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடல்

திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் எதிர் கொள்வது தொடர்பாக இளைஞர்களுடன் இந்தியாவிற்கான கனடா நாட்டின் கமிஷனர் கலந்துரையாடலில் பங்கேற்றார்.
திருவள்ளூரில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடல்   நிகழ்ச்சி.
திருவள்ளூரில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி.

திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் எதிர் கொள்வது தொடர்பாக இளைஞர்களுடன் இந்தியாவிற்கான கனடா நாட்டின் கமிஷனர் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

பீலிவ் தொண்டு நிறுவனம், கனடா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக உதவியுடன் உள்ளூர் செயல்பாட்டுக்கான கனடா நிதி திட்டம் மூலம் தென்னிந்தியாவில் இளைஞர்களின் தலைமைத்துவத்தை வளர்த்தல் மூலம் காலநிலை மாற்றத்தினை எதிர் கொள்ளவும் சமாளிக்கவும் முடியும். மேலும், கார்பனை குறைத்தலை நோக்கமாக கொண்டு தமிழகத்தில் திருவள்ளூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் என மொத்தம் 110 கிராமங்களில் ஸ்பீச், ஐ.ஆர்.சி.டி.எஸ் மற்றும் ரோப்ஸ் தொண்டு நிறுவனங்கள் மூலம் சில்ரன் பிலீவ் தொழில் நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன வளாகத்தில் இளைஞர்களுடனான கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவிற்கான கனடா நாட்டின் கமிஷனர் கேம்ரோன் மேக்கே தலைமை வகித்து இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், கனடா மற்றும் இந்தியா நாட்டில் உள்ள விஞ்ஞானிகளும், அரசாங்கமும் காலநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான செயல்பாடுகளில் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதில் கனடா நாட்டின் இளைஞர்களின் பங்கு சிறப்பாக உள்ளது.  இதன் மூலம் கல்வியளித்தல், பல்லுயிர் பாதுகாத்தல், நீடித்த நிலைத்த வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் முடியும்.

அதேபோல் சுற்றுப்புற சூழலுக்கான செயல்பாடுகளை நன்றாக இருந்தால் தரமான வாழ்க்கையை உறுதி செய்ய முடியும். அதனால் இங்குள்ள இளைஞர்களின் தலைமைத்துவத்தையும் காலநிலை மாற்றத்திற்கான செயல்பாடுகளை பாராட்டி ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது இவருடன் இந்தியாவிற்கான கனடா நாட்டின் அரசியல் பொருளாதார மற்றும் பொது விவகாரங்களுக்கான கவுன்சிலர் மேத்யூ லோகன், கனடாவிற்கான தமிழ்நாடு வர்த்தக கமிஷனர் சுபா சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அதற்கு முன்னதாக சில்ரன் பிலீவ் இந்திய இயக்குநர் நான்சி அனபெல் வரவேற்றார்.

இதில் சில்ரன் பிலீவ் சர்வதேச முதன்மை திட்ட அலுவலர் டாக்டர்.பெலின்டா பென்னட், சில்ரன் பிலீவ் இணைந்த ஸ்பீச், ஐ.ஆர்.சி.டி.எஸ், ரோப்ஸ் தொண்டு நிறுவன இயக்குநர்கள் செல்வம், ஸ்டீபன், தனசேகரன், இளைஞர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com