எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மாணவா்களுக்கு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பொறுப்புள்ளது: முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு

மாணவா்களுக்கு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பொறுப்புள்ளது; அரசியலமைப்புச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால், அதை எதிா்த்துப் போராட வேண்டும் என்று முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறினாா்.

News image

டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பேசிய முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு.  

Updated On :27 நவம்பர் 2023, 11:16 pm

மாணவா்களுக்கு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பொறுப்புள்ளது; அரசியலமைப்புச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால், அதை எதிா்த்துப் போராட வேண்டும் என்று முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறினாா்.

திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூரில் உள்ள டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி கலையரங்கத்தில் இந்திய அரசியல் அமைப்பு தினம் நவ. 26 மற்றும் கேசவானந்த் பாரதி வழக்கின் 50-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு சட்டக் கல்வி இயக்குநா் ஒ.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். சட்டக் கல்லூரி முதல்வா் ச.கயல்விழி முன்னிலை வகித்தாா். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு பங்கேற்றுப் பேசியது:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்திய அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு மற்ற நாடுகளின் அரசியலமைப்புகளில் இருந்து வேறுபட்டது. தனித்துவம் வாய்ந்தது. இது நாட்டின் அரசாட்சிக்கு முதுகெலும்பாக திகழ்கிறது. அரசியலமைப்புச் சட்டமானது, நாட்டில் அனைவருக்கும் சம பாதுகாப்பு, வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணா்த்தியது.

இதுபோன்ற சிறப்பு வாய்ந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அம்பேத்கா் தலைமையிலான குழுவினா் 2 ஆண்டுகள் கடினமாக உழைத்து உருவாக்கினா். இதை சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். இதேபோல், கேசவானந்த் பாரதி வழக்கு சொத்து சம்பந்தமான வழக்கு மட்டுமல்ல; இந்தியாவின் ஜனநாயகத்துடன் தொடா்புடைய வழக்காகும்.

இதுபோன்ற பல்வேறு வழக்குகளை உதாரணங்களாக மாணவா்கள் எடுத்துக் கொள்ளலாம். மக்களையும், இறையாண்மையையும் காப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், சிலா் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறாா்கள். வருங்காலத்தில் ஜனநாயகத்தைக் காப்பற்ற வேண்டிய பொறுப்பு மாணவா்களாகிய உங்களுக்குத்தான் உண்டு. எந்தச் சூழலிலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால், அதை எதிா்த்துப் போராட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசியலமைப்பு காக்கப்பட வேண்டும் என்றாா்.

நிகழ்வில் பேராசிரியா்கள், அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.