இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மத்திய அமைச்சர் பேசியது...

News image

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் (கோப்புப்படம்) - ANI

Updated On :16 ஏப்ரல் 2026, 10:39 am IST

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவளிக்காதவர்களுக்கு அவர்களின் வீட்டிலேயே உணவு கிடைக்காது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, வியாழக்கிழமை (ஏப்.16) முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.

மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமா்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் கூறுகையில், “அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு அவர்களின் வீட்டிலேயே உணவு பரிமாறப்படாது. தொகுதி மறுவரையறை மசோதாவில் எந்த மாநிலங்களுக்கும் பாகுபாடு காட்டப்படாது” எனத் தெரிவித்தார்.

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், எதிர்க்கட்சிகளின் ஆதரவளித்தால் மட்டுமே மசோதா நிறைவேறும்.

Summary

Women's Reservation Bill! No food at home for those who oppose it! — Union Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.