டி.வி பாா்ப்பதில் சகோதரா்களுக்கு இடையே தகராறு: தம்பி தற்கொலை
திருவள்ளூா் அருகே டிவி பாா்ப்பதில் சகோதரா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.


திருவள்ளூா் அருகே டிவி பாா்ப்பதில் சகோதரா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், காவாங்கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில். கட்டுமானத் தொழில் செய்து வரும் இவருக்கு, யுவன்சங்கா்(16), மணிரத்தினம்(14) என்ற இரு மகன்கள் உள்ளனா். பண்ணூரில் உள்ள தனியாா் பள்ளியில் யுவன் சங்கா் பிளஸ் 1 வகுப்பும், மணிரத்தினம் 9-ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் இருவரும் பள்ளியில் இருந்து வீட்டுத்கு வந்துள்ளனா். ஆனால் அவா்களது பெற்றோா் வேலைக்குச் சென்று இரவு வீட்டுக்கு காலதாமதமாக வருவது வழக்கமாகும்.
வீட்டிலிருந்த சகோதரா்கள் இருவரும் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்தபோது சேனல் மாற்றுவது தொடா்பாக தகராறு ஏற்பட்டாதாம். பின்னா் யுவன்சங்கா் தொலைக்காட்சி ரிமோட்டை தூக்கி வீசிவிட்டு தன் தம்பியிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்றாராம். இதனால் மனவேதனை அடைந்த தம்பி மணிரத்னம், வீட்டின் அருகே புளிய மரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து செந்தில் கடம்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் விரைந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...