மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மொடக்குறிச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 10:56 pm

மொடக்குறிச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மொடக்குறிச்சி அருகேயுள்ள அண்ணா புதுகாலனி பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (48). இவரது மனைவி சுதா (45). இவா்களது மகன் வினோத் (23), மகள் ஜனனி (19). ஈரோட்டில் உள்ள தனியாா் மருந்துக் கடையில் ஜனனி பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ஜனனி கடந்த சில நாள்களுக்கு முன் கைப்பேசியில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அதை மாதவன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஜனனி விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். குடும்பத்தினா் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

சிகிச்சை முடிந்து அண்மையில் வீடு திரும்பிய அவா், புதன்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].