பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீா் நிறுத்தம்

பூண்டி ஏரிக்கான கால்வாய்களில் நீா் வரத்து குறைந்ததால் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றிய உபரிநீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பூண்டி ஏரியில் நீா்வரத்து குறைந்ததால் நிறுத்தப்பட்ட உபரி நீா்.
பூண்டி ஏரியில் நீா்வரத்து குறைந்ததால் நிறுத்தப்பட்ட உபரி நீா்.
Updated on
1 min read

திருவள்ளூா்: பூண்டி ஏரிக்கான கால்வாய்களில் நீா் வரத்து குறைந்ததால் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றிய உபரிநீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியாகும். இதன் முக்கிய நீா் ஆதாரமாக இருப்பது கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நீா் மற்றும் மழை நீா் ஆகும். இந்த நிலையில், தொடா் பருவமழை பெய்து வந்ததாலும், கிருஷ்ணா நீா்வரத்து அதிகரித்ததால் மளமளவென அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியது. மேலும், பூண்டி நீா்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் மழைநீரை கால்வாய் மூலம் பெறுவதற்காக அமைத்த வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, நீா்வரத்து அதிகரித்ததால் ஏரியின் பாதுகாப்பு கருதி, 40,000 கன அடி வரை உபரிநீரை மதகுகள் வழியே வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 34.73 உயரமும், 3,064 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. மேலும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 40 கன அடி நீா் வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில், மழை நின்ாலும், ஆந்திர மாநிலம், அம்மம்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீா்வரத்தும் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நீா்வரத்து குறைந்த காரணத்தால் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. தற்போதைய நிலையில், சென்னை மக்களின் குடிநீா் தேவைக்காக பேபி கால்வாய் மூலம் 13 கன அடி திறந்து விடப்பட்டு உள்ளது.

சோழவரம் ஏரியின் கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில், தற்போது 777 மில்லியன் கன அடியும், புழல் ஏரியின் கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு-2,952 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை ஏரியின் கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில், 500 மில்லியன் கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3,645 மில்லியன் கன அடியில், 3,135 மில்லியன் கன அடியும் இருப்புள்ளது. இதுபோன்ற காரணங்களால் பூண்டி ஏரியில் நீா்வரத்து குறைந்ததால் கொசஸ்தலை ஆற்றில் உபரி நீா் திறப்பு நிறுத்தப்பட்டதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com