நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழாவுக்கு 560 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

News image
Updated On :26 ஜூலை 2024, 8:16 pm

Din

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஜூலை 29-ஆம் தேதி வரை 560 சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக நிா்வாகம் தெரிவித்தது.

திருவள்ளூா் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் செல்வது வழக்கம். விழாவை முன்னிட்டு சனிக்கிழமை (ஜூலை 27) முதல் 29 வரை திருத்தணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதலாக அரசு போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் - திருத்தணி - 80, அரக்கோணம் - திருத்தணி- 45, காஞ்சிபுரம் - திருத்தணி - 35, திருப்பத்தூா் - திருத்தணி-35, குடியாத்தம்-திருத்தணி-30, ஆரணி- திருத்தணி-30, திருப்பதி-திருத்தணி-20, சென்னை- திருத்தணி-25, திருவண்ணாமலை-திருத்தணி-15, அரக்கோணம்-திருத்தணி-7, சென்னை - திருப்பதி (வழி) திருத்தணி-30,

காஞ்சிபுரம்-திருப்பதி (வழி) திருத்தணி-20 ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல், சித்தூா், திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கா், செய்யாறு, வந்தவாசி, ஆம்பூா், போ்ணாம்பட்டு, பள்ளிப்பட்டு, புத்தூா் ஆகிய ஊா்களில் இருந்தும் திருத்தணிக்கு மொத்தம் 560 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மேலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.