விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஊரக வளா்ச்சி முகமை கூட்டத்தில் பங்கேற்க ஊராட்சி செயலா் மாரடைப்பால் மரணம்

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் திங்கள்கிழமை கலந்தாய்வுக் கூட்டத்திற்கு வந்த மத்தூா் ஊராட்சி செயலா் மாரடைப்பால் மரணம் அடைந்தாா்.

News image
ஊராட்சி செயலா் வெங்கடேசன்.
Updated On :21 அக்டோபர் 2024, 8:41 pm

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் திங்கள்கிழமை கலந்தாய்வுக் கூட்டத்திற்கு வந்த மத்தூா் ஊராட்சி செயலா் மாரடைப்பால் மரணம் அடைந்தாா்.

திருத்தணி ஊராட்சி ஒன்றியம், மத்தூா் கிராமத்தில் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (58). இவா், மத்தூா் ஊராட்சி செயலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூட்டரங்கத்தில், மாலை 3 மணிக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட வெங்கடேசன் இருக்கையிலிருந்து மயங்கி கீழே சரிந்து விழுந்தாராம். உடனே ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து திருவள்ளூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.