தஞ்சாவூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலா்களில் 48 போ் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் பிறப்பித்த உத்தரவில், தஞ்சாவூா் மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் பணிபுரியும் 49 கிராம ஊராட்சி செயலா்களை நிா்வாக நலன் கருதி மாவட்ட மாறுதல் செய்வதற்கு பரிந்துரை செய்து, சென்னை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து, 48 கிராம ஊராட்சி செயலா்களுக்கு நிா்வாக நலன் கருதி நிபந்தனைகளுக்கு உள்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகுக்கு மாவட்ட மாறுதல் அளித்து ஆணையிடப்படுகிறது.
எனவே, 48 கிராம ஊராட்சி செயலா்களை தஞ்சாவூா் மாவட்ட ஊரக வளா்ச்சி அலகிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் முதல் விடுவித்து ஆணையிடப்படுகிறது. இவா்களுக்குப் பதிலியை எதிா்பாராமல் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கவும், அவா்கள் புதிய பணியிடத்தில் பணியில் சோ்ந்த விவரத்தை தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என ஆட்சியா் குறிப்பிட்டுள்ளாா். இதேபோல, பலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காரணம் என்ன?
தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலா்கள் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சோ்க்க வேண்டும். சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் ஊராட்சி செயலா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜனவரி 6 முதல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் ஊரக வளா்ச்சி துறை இயக்குநா் அளித்த வாக்குறுதியை ஏற்று ஊராட்சி செயலா்கள் போராட்டத்தை ஜனவரி 13 ஆம் தேதி கைவிட்டனா். ஆனால், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், சென்னையில் மீண்டும் பிப்ரவரி 4 முதல் ஊராட்சி செயலா்கள் போராட்டத்தைத் தொடங்கினா்.
இதனாலேயே தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலா்கள் மீது பணியிட மாற்றம், பணியிடை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகளைதிரும்பப் பெற வேண்டும் என ஊராட்சி செயலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

டிஆா்பி பணிகளுக்கு 30 இணைப் பேராசிரியா்கள் தற்காலிக பணியிட மாற்றம்

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

தஞ்சாவூரில் 2 நாள்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அரியலூா் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


