வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2 கோடி

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2 கோடி...

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 45 நாள்களில் ரூ. 2 கோடியே 9 லட்சத்து 51 ஆயிரத்து, 249 ரொக்கம் மற்றும் 794 கிராம் தங்கம், 15.128 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனா். இதில், பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா்.

இந்த நிலையில், முருகன் கோயிலில் காா்த்திகை தீப விழா நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு, முருகப் பெருமானை வழிபட்டனா். பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி வெள்ளிக்கிழமை காலை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது. இதை முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

இதில், திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வுபெற்ற அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கைகளை எண்ணினா்.

இதில், கடந்த 45 நாள்களில் ரூ. 2 கோடியே 9 லட்சத்து 51 ஆயிரத்து, 249 ரொக்கம் மற்றும் 794 கிராம் தங்கம், 15.128 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.