திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: மீட்புப் பணிகள் மும்முரம்!

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: மீட்புப் பணிகள் மும்முரம்!
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரயில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணை ஏற்றி வந்த ரயில் தடம்புரண்டதால் ஏற்பட்ட உராய்வினால் டேங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அடுத்தடுத்து உள்ள 18 டேங்கர்களில் இருந்த 8.40 லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் எரிந்து நாசமானாது. தீ விபத்து காரணமாக கடும் புகையும் கிளம்பியது.

மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

விபத்துக்குள்ளான டேங்கர்கள் 3 டிராக்குகளிலும் தடம்புரண்டததால், ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. டேங்கர்களில் ஏற்பட்ட தீயை 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 10 மணிநேரம் போராடி அணைத்தனர்.

இதனையடுத்து, சேதமடைந்த தண்டவாளம் மற்றும் அறுந்து விழுந்த மின் இணைப்புகளை சரிசெய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : 85% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

Summary

A tanker train carrying crude oil derailed near Thiruvallur and caught fire, completely destroying all tankers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com