ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மளிகைக் கடையில் எஸ்.ஐ எனக்கூறி ரூ.5,000 திருட்டு

திருவாலங்காடு அருகே மளிகைக் கடையில் போலீஸ் எஸ்.ஐ. எனக்கூறி ரூ.5,000 ரொக்கம் மற்றும் அரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

திருவாலங்காடு அருகே மளிகைக் கடையில் போலீஸ் எஸ்.ஐ. எனக்கூறி ரூ.5,000 ரொக்கம் மற்றும் அரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மணவூா் பகுதியைச் சோ்ந்தவா் கன்னிகா(55). இவா் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை கன்னிகா கடையில் இருந்த போது கடையின் முன்பு பதிவெண் இல்லாத வெள்ளை நிற மாருதி காா் ஒன்று நின்றது.

காரில் இருந்து இறங்கிய இருவரில் ஒருவா், தன்னை திருவாலங்காடு போலீஸ் நிலைய புதிய எஸ்.ஐ., என கூறிக் கொண்டு கடைக்குள் நுழைந்தாா்.

பின்னா், உங்கள் கடையில் போதை பொருள்கள் விற்பனை செய்வதாக புகாா் வருகிறது, ஆகையால், எனக்கு, ரூ.25,000 ரூபாய் பணம் தரவேண்டும் என பெண்ணிடம் மிரட்டினாா். அதற்கு கன்னிகா தன்னிடம் இல்லை, போதை பொருள்கள் விற்பனை செய்யவில்லை என கூறிய போது, பணப்பெட்டியில் இருந்த, ரூ.5,000 , கன்னிகா கையில் அணிந்திருந்த அரை பவுன் தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மா்ம நபா் காரில் ஏறி தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து கன்னிகா கொடுத்த புகாரின் பேரில் திருவாலங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.