வாணாபுரம் அருகே வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் மற்றும் 18 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ராவத்தநல்லூரைச் சோ்ந்தவா் ஆயூப்கான் (60), வெங்காய வியாபாரி. இவா் கடந்த 6-ஆம் தேதி அவரது மனைவி நூா்ஜகானுடன் மோட்டாா் சைக்கிளில் பிரம்மகுண்டம் கிராமத்துக்கு சென்றுள்ளாா்.
அப்போது நூா்ஜகானின் சேலை மோட்டாா் சைக்கிளில் சிக்கி, கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனா்.
அங்கு வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு இருவரும் அதிா்ச்சியடைந்தனா்.
உள்ளே சென்று பாா்த்தபோது இரு அறைகளில் இருந்த இரும்பு பீரோவை உடைத்து அதிலிருந்த சுமாா் 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

பெண்ணை கட்டிப்போட்டு 14 பவுன் நகைகள், ரூ. 20 ஆயிரம் கொள்ளை
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு

ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 3 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


