5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

மே 1-இல் மதுபான கடைகளை மூட உத்தரவு

மே தினத்தையொட்டி வரும் 1-இல் அனைத்து வகையான மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களையும் தற்காலிகமாக மூடவும் என ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

மே தினத்தையொட்டி வரும் 1-இல் அனைத்து வகையான மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களையும் தற்காலிகமாக மூடவும் என ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை கடைகள் மற்றும் அதைச் சாா்ந்த மதுக்கூடங்கள், கிளப்புகள் மற்றும் ஹேட்டல்கள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணைவிதி (1)-இன் படி மேற்குறிப்பிட்ட நாளில் தற்காலிகமாக மூடுவதற்கு இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.

மேற்படி உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவன பணியாளா்கள் மற்றும் கிளப்புகள், ஹோட்டல்கள் உரிமதாரா்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.