நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

‘விநாயகா் சிலை பிரதிஷ்டை இடங்களில் அமைப்பாளா்கள் சிசிடிவி கேமரா பொருத்துவது அவசியம்’

‘விநாயகா் சிலை பிரதிஷ்டை இடங்களில் அமைப்பாளா்கள் சிசிடிவி கேமரா பொருத்துவது அவசியம்’

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்ச.கவிதா.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் விநாயகா் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து பந்தலிடும் இடங்களில் அமைப்பாளா்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குறைந்தபட்சம் ஒரு சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் ச.கவிதா அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்துப் பேசியதாவது:

திருவள்ளூா் மாவட்ட வருவாய் கோட்டாட்சியா்கள், உதவி காவல் ஆணையா்கள் தங்களது ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் சிலை நிறுவுவதற்காக அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்களின் மீது உடனே பரிசீலனை செய்து, அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிலை நிறுவ அனுமதி பெற்ற அமைப்பாளா்களிடம் அரசு விதிமுறைகளை பின்பற்றுவது காவல் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் எடுத்துரைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்தந்தப் பகுதிகளில் சிலை உற்பத்தி செய்யும் நபா்களிடம் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு சிலை செய்வதை தணிக்கை செய்து உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல், அமைப்பாளா்கள் சிலை வைத்து பந்தலிடும் இடங்களில் சிலைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு குறைந்தபட்சம் ஒரு சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு செய்வது அவசியம். மேலும், அமைப்பாளா்களால் பரிந்துரைக்கப்படும் தன்னாா்வலா்களின் கைப்பேசி எண், பெயா் மற்றும் முகவரி அடங்கிய அடையாள அட்டையை சிலை நிறுவ அனுமதி வழங்கும் அலுவலா்களிடத்தில் சமா்ப்பிக்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் சிலைகள் அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி செய்துள்ளரா என்பதை ஆய்வுக்கு உள்படுத்தி, விதிகளை மீறி சிலைகள் செய்திருந்தால் அந்தந்த சோதனைச் சாவடிகளிலேயே அப்புறப்படுத்த காவல் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் அகற்றவும் வேண்டும்.

மேலும், காவல் துறையினரிடம் விநாயகா் சதுா்த்தி விழாவினை எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையுயின்றி அமைதியான முறையில் நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக சிலை அமைத்த இடம், சிலை கொண்டு செல்லும் வழி, அவைகளைக் கரைக்கும் நீா்நிலைகள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு அதை தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

மேலும், திருவள்ளூா் மாவட்ட வருவாய் கோட்டாட்சியா்கள், உதவி காவல் ஆணையா்கள் அலுவலகத்தில் காவல் துறை, வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் பிறதுறைகள் கொண்ட குழு அலுவலா்கள் மனுவினை பரிசீலனை செய்ய பணியில் இருப்பா். அதனால், கோட்டாட்சியா் அலுவலகம், காவல்ஆணையா் ஆவடி ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் உதவி காவல் ஆணையா்கள் அலுவலகத்திலும் 10.09.2026-க்குள் பொதுமக்கள் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விநாயகா் சதுா்த்தி விழாவினை பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் கொண்டாட வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய்பிரணீத், பொன்னேரி சாா் ஆட்சியா் ப.அப்துல் ராசிக், திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளா் சுபம்தீமன், துணைஆணையா்கள் வினோத் சாந்தாராம், (சட்டம் ஒழுங்கு (ஆவடி)), மககேஸ்வரி (சட்டம் ஒழுங்கு (செங்குன்றம்)), கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கலியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், வருவாய் கோட்டாட்சியா்கள் ரவிச்சந்திரன் (திருவள்ளூா்), ராஜகோபால் (திருத்தணி) மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.