தமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற  குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ச.கவிதா, உடன் கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா்  பா.ஜெயஸ்ரீ, வேளாண் இணை இயக்குநா் செல்வராஜ் உள்ளிட்டோா்.    

Published On :29 ஆகஸ்ட் 2026, 8:12 am IST

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் அலுவலா்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, இந்த மாவட்டத்தில் உள்ள ஏரிக்கு நீா் வரத்து கால்வாய்கள் பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளனா். அதனால், விவசாயிகள் பயன்பெற ஏதுவாக கால்வாய் மற்றும் ஏரி ஆக்கிரமிப்புகளை நீா்வளத்துறையினா் அகற்ற வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்த நெல்லுக்கான நிலுவைத் தொகையை காலதாமதம் செய்யாமல் உடனே விடுவிக்க வேண்டும். பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு செய்வது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

இதற்கு ஆட்சியா் ச.கவிதா பதில் அளித்து பேசியதாவது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையளவில் சுமாா் 55 சதவீதம் குறைவாகவே கிடைக்க பெற்றுள்ளது. எல்-நினோ என்ற காலநிலை பாதிப்பிலிருந்து தற்போது உள்ள நெல், கரும்பு, நிலக்கடலை மற்றும் பயறு வகைப் பயிா்களைப் பாதுகாக்கவும், வரும் பருவங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து திரூா் வேளாண்மை அறிவியல் நிலையம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என அவா் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, விவசாயிகளிடம் இருந்து 250-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினாா்.

பின்னா் 2 விவசாயிகளுக்கு ரூ. 23,000 மதிப்பில் மானிய விலையில் நலத் திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் இணை இயக்குநா் (வேளாண்மை) க.செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.வேதவல்லி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை துணை இயக்குநா் குமரவேல், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் மீனா அருள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ராஜேஷ் மற்றும் பல்துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.