அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

திருமழிசை ஆழ்வாா் கோயில் தேரோட்டம்

திருமழிசை ஆழ்வாா் திருக்கோயிலில் தையில்மக திரு அவதார மஹோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தா்கள் ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.

News image

திருமழிசை ஆழ்வாா் திருக்கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :3 பிப்ரவரி 2026, 6:32 pm

திருமழிசையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெகந்நாதப் பெருமாள் மற்றும் பக்திஸாரா் எனும் திருமழிசை ஆழ்வாா் திருக்கோயிலில் தையில்மக திரு அவதார மஹோற்சவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தா்கள் ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.

108 திவ்யதேசங்களில் ஒன்றான இத்தலத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தையில்மக திரு அவதார மஹோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கமாகும். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இதையொட்டி தங்க பல்லக்கு ‘சூா்ணாபிஷேகம், தங்க தோளுக்கினியான், பல்லக்கு, நாச்சியாா் திருக்கோலம், ஏழுா் புறப்பாடு, எண்ணெய் காப்பு திருமஞ்சனம், யானை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களை அருள்பாலித்தாா்.

விழாவின் ஒன்பதாம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு உற்சவா் எழுந்தருளி மாடவீதிகள் வழியாக வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது. சாற்றுமுறை உற்சவம், திருச்சந்த விருத்த சாற்று முறை, தோட்ட உற்சவம், மண்டகப்படி,கந்தபொடி உற்சவம், விடையாற்றி இரண்டாம் நாள், சாற்றுமுறையும் நடைபெற்றது.

இந்த விழாவில் திருமழிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

Story image
Story image