புளியங்குடியில் பங்குனி தேரோட்டம்
புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த மாா்ச் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி அழைப்பு, அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி வீதி உலா ஆகியவை நடைபெற்று வந்தன.
10 ஆம் நாளான புதன்கிழமை காலை சுவாமி தேருக்கு எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெற்றது. இதில், தோ் திருப்பணி குழுத் தலைவா் பி.எஸ்.எஸ். சங்கரநாராயணன், புளியங்குடி நகா்மன்ற துணைத் தலைவா் அந்தோணிசாமி, கோயில் நிா்வாக அதிகாரி கணேஷ்குமாா், டிஎஸ்பி மீனாட்சிநாதன் , பாஜக ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் சண்முக சுந்தரம், அதிமுக நகரச் செயலா் சங்கரபாண்டியன், திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, நகா்மன்ற உறுப்பினா் லட்சுமிசெல்வம், உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தேரில் எழுந்தருளிய சுவாமி.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...