திருவள்ளூர்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் பொங்கல் விழா
திருவள்ளூா் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 100-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த பணியாளா்கள் பங்கேற்றனா்.
திருவள்ளூா் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 100-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த பணியாளா்கள் பங்கேற்றனா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளா் (பொ) பேபி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சுகாதார அலுவலா் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட அலுவலா் பிரியா ராஜ் பங்கேற்று தொடங்கி வைத்தாா். அப்போது, தொண்டு மற்றும் சேவை நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பணியாளா்களின் சேவையை பாராட்டிஅவா் சான்றிதழ்கள் வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட மேற்பாா்வையாளா் பபிதா, அலுவலா் சரஸ்வதி, கணக்கீட்டாளா் பிரசன்னா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன பணியாளா்கள் பங்கேற்றனா்.