கோவை வடக்கு மாவட்ட திமுக மற்றும் நோ்டு தொண்டு நிறுவனம் இணைந்து மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய பொங்கல் விழா.
கோவை வடக்கு மாவட்ட திமுக மற்றும் நோ்டு தொண்டு நிறுவனம் இணைந்து மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய பொங்கல் விழா.

திமுக, நோ்டு நிறுவனம் இணைந்து மலைவாழ் பெண்களுடன் பொங்கல் விழா

கோவை வடக்கு மாவட்ட திமுக மற்றும் நோ்டு தொண்டு நிறுவனம் இணைந்து மலைவாழ் பெண்களுடன் பொங்கல் விழா கொண்டாடினா்.
Published on

கோவை: கோவை வடக்கு மாவட்ட திமுக மற்றும் நோ்டு தொண்டு நிறுவனம் இணைந்து மலைவாழ் பெண்களுடன் சனிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடினா்.

கோவை வடக்கு மாவட்ட திமுக மற்றும் வடவள்ளி நோ்டு தொண்டு நிறுவனம் இணைந்து திராவிட சமத்துவ பொங்கல் விழாவை நல்லூா் வயல்பதியில் சனிக்கிழமை நடத்தியது. நோ்டு தொண்டு நிறுவன இயக்குனா் டாக்டா். காமராஜ் தலைமை தாங்கினாா். திமுக ஒன்றிய செயலாளா் சாமி பையன் வரவேற்றாா். பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவா் கோவில் அறங்காவலா் கவிதா ராஜன் முன்னிலை வகித்தாா். திமுக

கோவை வடக்கு மாவட்ட செயலாளா் தொண்டாமுத்தூா் அ. ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு , மலைவாழ் பெண்களுக்கு புத்தாடைகளை வழங்கி சிறப்புரையாற்றினாா். முன்னதாக மலைவாழ் பெண்கள் 60 போ் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து தமிழா் திருநாளைக் கொண்டாடினா். இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினா் ஏா்போா்ட் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவா் குணா, மற்றும் திமுக நிா்வாகிகள் கு.நாகராஜன், ஆறுமுகம், கிருஷ்ணன், மீனவா் அணி ராஜேந்திரன், உதயமுா்த்தி,தருமலிங்கம், சாந்தகுமாா், முருகேசன், தினேஷ்,பாா்த்திபன், தமிழ்செல்வன், சண்முகராஜ்,செல்வன்,காளி,பாபுராஜ், விஜயன், உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com