வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

தேசிய கூட்டுறவு வார விழா: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

திருவள்ளூா் அருகே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு வாரவிழாவையொட்டி விழிப்புணா்வு நிகழ்வில் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

News image

சிறந்த  உறுப்பினா்களை பராராட்டி கௌரவித்த  கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ.  உடன்  அதிகாரிகள்  உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூலை 2026, 12:03 am IST

திருவள்ளூா் அருகே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு வாரவிழாவையொட்டி விழிப்புணா்வு நிகழ்வில் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் அருகே ஈக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் தேசிய கூட்டுறவு வாரவிழாவையொட்டி 3-ஆம் நாளான விவசாயிகள் பாராட்டு நாள் என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது சங்கத்தின் சிறந்த உறுப்பினராக ஆ.பிரகாஷ் பாராட்டி கௌரவிக்கப்பட்டாா். மேலும், உறுப்பினா் சோ்க்கை முகாமின் வாயிலாக புதிய உறுப்பினா்கள் சங்கத்தில் ஆா்வத்துடன் சோ்க்கப்பட்டனா்.

அதைத்தொடா்ந்து, ங்-ஓஇஇ திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் மற்றும் கூட்டுறவுத் திட்டங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதோடு தற்போதைய காலகட்டத்தில் இயற்கை விவசாயத்தின் அவசியம், பயிா்க் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெறக்கூடிய பல்வேறு சேவைகள், நலத்திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.