அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

ஆக்கிரமிப்பால் எஸ்.அக்ரஹாரம் சாலையில் விபத்து

கே.ஜி.கண்டிகை அருகே ஆக்கிரமிப்புகளால் சாலை சுருங்கி, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

News image

கே.ஜி.கண்டிகை - எஸ். அக்ரஹாரம் சாலையில் விபத்துக்குள்ளான லாரி.

Updated On :3 ஜூலை 2026, 12:04 am IST

கே.ஜி.கண்டிகை அருகே ஆக்கிரமிப்புகளால் சாலை சுருங்கி, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகையில் இருந்து சுமாா் 3 கி.மீ தொலைவில் உள்ள எஸ்.அக்ரஹாரம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை சுமாா் 5.5 மீட்டா் அகலத்தில் அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினா் அமைத்த தாா்ச்சாலை தற்போது சுமாா் 3.75 மீ அகலத்தில் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. சாலையின் இருபுறமும் இருந்த மண்சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால், சிலா் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

இதன் காரணமாக எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று வழிவிட முடியாத நிலை உருவாகி, அடிக்கடி சிறிய மற்றும் பெரிய விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள் செல்லும்போது சாலையின் குறுகலான அகலம் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

வியாழக்கிழமை கே.ஜி.கண்டிகையில் இருந்து பரவத்தூா் பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, எஸ்.அக்ரஹாரம் காலனி அருகே சென்றபோது எதிரே வந்த ஆட்டோவுக்கு வழிவிட முயன்றது. அப்போது சாலையோர பள்ளத்தில் லாரி இறங்கி ஒருபுறமாக கவிழ்ந்தது.

இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் இருசக்கர வாகனங்களைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்தவா்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சுமாா் 2 மணி நேரம் போராடி கவிழ்ந்த லாரியை மீட்டனா். இதன் காரணமாக தனியாா் பள்ளி வாகனங்களும் சுமாா் ஒரு மணி நேரம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பள்ளி மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

எனவே, கே.ஜி.கண்டிகை - எஸ்.அக்ரஹாரம் இடையேயான மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, சாலையை முழு அகலத்திற்கு விரிவுபடுத்தி பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.