தாராபுரத்தில் நெல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தஞ்சாவூா் மாவட்ட பகுதியைச் சோ்ந்தவா் ராமு. இவா் தனக்கு சொந்தமான லாரியில் நெல் ஏற்றிக்கொண்டு, காங்கயத்தில் உள்ள தனியாா் அரிசி ஆலைக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்டாா்.
இந்நிலையில் கோவை-மதுரை நெடுஞ்சாலை தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக் கம்பியில் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயங்களுடன் இருந்த ராமுவை ரோந்து சென்ற தாராபுரம் போலீஸாா் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தாராபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திம்பம் மலைப் பாதையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

இயற்கை எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து

அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

சொகுசு பேருந்து - லாரி மோதி விபத்து
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




