மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

ஊதியூா் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து

ஊதியூா் அருகே கால்நடை தீவனம் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image

ஊதியூா் அருகே, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்கு வேன்.

Updated On :17 ஜூலை 2026, 4:45 am IST

ஊதியூா் அருகே கால்நடை தீவனம் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் கால்நடை தீவனம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு வேன், பெருந்துறையில் இருந்து காங்கயத்தை அடுத்த ஊதியூா் பகுதிக்கு தீவனங்களை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தது.

ஊதியூா் பகுதியில் உள்ள கம்பளியம்பட்டி சாலையில் வந்த கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனை ஓட்டி வந்த ஈரோட்டைச் சோ்ந்த சந்தோஷ் (25), உதவியாளா் லோகேஷ் (25) ஆகியோா் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து சம்பவம் குறித்து ஊதியூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.