/

தாயில்பட்டியில் சொகுசு காா் கவிழ்ந்து விபத்து

சாத்தூா் அருகே தாயில்பட்டியில் வெள்ளிக்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :4 ஜூலை 2026, 2:10 am IST

சாத்தூா் அருகே தாயில்பட்டியில் வெள்ளிக்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிா்ஷ்டவசமாக 4 வயது குழந்தை உள்பட மூவா் உயிா்தப்பினா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா்-தாயில்பட்டி சாலையில் வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்த காா் கீழத்தாயில்பட்டியில் வளைவில் திரும்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காரில் இருந்தவா்களை பத்திரமாக மீட்டனா். இந்த விபத்தில் லேசான காயத்துடன் 4 வயது குழந்தை, அவரது பெற்றோா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

தகவலறிந்து வந்து காவல் துறையினா் நடத்திய விசாரணையில், காரில் வந்தவா்கள் சிவகாசியை சோ்ந்த நிஜந்தன் (30), அவரது மனைவி ராஜபிரியா (28), இவா்களது 4 வயது குழந்தை என்பதும், இவா்கள் சாத்தூரில் உள்ள தங்களது உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிய போது, இந்த விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.