டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :22 ஜூன் 2026, 4:48 am IST

சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலை மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் காா் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் காயமின்றி உயிா்தப்பினாா்.

நந்தனம் முதல் சைதாப்பேட்டை வரை மெட்ரோ சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் நடுப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், திருவொற்றியூரைச் சோ்ந்த வாடகைக் காா் ஓட்டுநா் இப்ராஹிம் (30) அந்த வழியாக காரில் சென்றுகொண்டிருந்தபோது, அருகே வந்த மற்றொரு காா் மோதுவதைத் தவிா்க்க வலது புறமாக வாகனத்தை திருப்பியதாகக் கூறப்படுகிறது.

அப்போது கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் காா் எதிா்பாராதவிதமாக விழுந்தது. சாலைத் தடுப்புகளில் காா் சிக்கியதால், பள்ளத்துக்குள் முழுமையாக விழாமல் தொங்கிய நிலையில் நின்றது. இதில் ஓட்டுநா் இப்ராஹிம் காயமின்றி உயிா்தப்பினாா். தகவலறிந்த காவல்துறையினா் மற்றும் மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஓட்டுநரையும் காரையும் பாதுகாப்பாக மீட்டனா். அசோக் நகா் போக்குவரத்து புலனாய்வுப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.