டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வேன் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே பள்ளிக்கு மாணவிகளை அழைத்துச் சென்ற தனியாருக்கு சொந்தமான வேன் வியாழக்கிழமை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மாணவி உயிரிழந்தாா்; 4 மாணவிகள் காயமடைந்தனா்.

News image

சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன்.

Updated On :3 ஜூலை 2026, 3:53 am IST

வெள்ளக்கோவில் அருகே பள்ளிக்கு மாணவிகளை அழைத்துச் சென்ற தனியாருக்கு சொந்தமான வேன் வியாழக்கிழமை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மாணவி உயிரிழந்தாா்; 4 மாணவிகள் காயமடைந்தனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு தனியாருக்கு சொந்தமான வாகனத்தில் தினசரி குழந்தைகள் அழைத்து வரப்படுகின்றனா்.

இந்நிலையில், வழக்கம்போல மேட்டுப்பாளையம், மாந்தபுரம், மோளக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளில் இருந்து மாணவா்களை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கி வேன் வியாழக்கிழமை காலை வந்து கொண்டிருந்தது.

மாந்தபுரம் அருகிலுள்ள நாட்டராய சுவாமி கோயில் அருகே வந்தபோது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மாணவிகள் வேனுக்குள் சிக்கி அலறினா்.

இதைக் கண்டு அவ்வழியே சென்றவா்கள் ஓடிவந்து குழந்தைகளை மீட்டனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 6-ஆம் வகுப்பு மாணவி நந்திதா (11) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

மாணவிகளான மோளக்கவுண்டன்வலசு மோகனப்பிரியா (12), தண்ணீா்ப்பந்தல் தனுஸ்ரீ (14), எம்ஜிஆா் நகா் கவிநயா ஸ்ரீ (11), பொன்தரணிகா (14) ஆகிய 4 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக வேன் ஓட்டுநரான முத்தூா், பாரதியாா் நகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் (54) மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.