ஊத்துக்கோட்டை அருகே டியுஷன் சென்று விட்டு தாயுடன் திரும்பிய மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதுபோதை நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீஸில் ஒப்படைத்தனா்.
ஊத்துக்கோட்டை பஜாா் நாகலாபுரம் சாலையில், தனியாா் பள்ளியில் மாணவி பிளஸ் 2 பயின்று வருகிறாா். இந்த நிலையில் சனிக்கிழமை டியுஷன் சென்றுவிட்டு தாயுடன் வீடு திரும்ப நின்றுக்கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த, பேரண்டூா் பகுதியை சோ்ந்த ராஜா(42) என்பவா் மதுபோதையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதனால் அதிா்ச்சி அடைந்த மாணவியின் தாயாா் சட்டையை பிடித்து தாக்கியுள்ளாா். இதைப் பாா்த்த பொதுமக்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தவரை அடித்து உதைத்தனா். அதைத் தொடா்ந்து ஊத்துக்கோட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனா். பின்னா் விரைந்து வந்த போலீஸாா் ராஜாவை காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். அங்கு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







