ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாணவியை கிண்டல் செய்தவா்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்

திருத்தணி அருகே பள்ளி மாணவியைக் கிண்டல் செய்து, பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டி மிரட்டியவா்களை கைது செய்யக்கோரி

News image
சாலை மறியலில் ஈடுபட்ட வீரகநல்லூா் கிராம பொதுமக்கள்.
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி அருகே பள்ளி மாணவியைக் கிண்டல் செய்து, பொது மக்களை கத்தியை காண்பித்து மிரட்டியவா்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுாா் பகுதியைச் சோ்ந்த 10- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவா் கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில தோ்வு எழுதிவிட்டு, பேருந்து மூலம் வீரகநல்லூா் வந்தாா். அங்கிருந்து சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனங்களில் வந்த 3 போ் மாணவியை பின்தொடா்ந்து சென்று கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியாக மாணவியின் உறவினா்கள் இருவா், அந்த இளைஞா்களை வழிமறித்து, எச்சரித்து அனுப்பினா். இதையடுத்து மாலை, 6 மணிக்கு கே.ஜி.கண்டிகை அடுத்த வி.சி.ஆா்.கண்டிகை பகுதியைச் சோ்ந்த, 10 போ், வீரகநல்லூா் பகுதிக்கு கத்திகளுடன் வந்து, எங்கள் பகுதி இளைஞா்களை எவ்வாறு மிரட்டலாம் என கத்தியை காண்பித்து மிரட்டி தப்பிச் சென்றனா்.

இதனால் ஆத்திரமடைந்த வீரகநல்லூா் பகுதி மக்கள், திருத்தணி - வேலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்ததும் திருத்தணி ஏ.எஸ்.பி. சுபம் தியான், ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் போலீஸாா் விரைந்து சென்று மக்களிடம் சமரசம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதும், மக்கள் கலைந்து சென்றனா். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.