தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கும்மிடிப்பூண்டி அரசு ஐடிஐயில் மாணவா்கள் சோ்க்கை

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம்

Updated On :20 மே 2026, 12:17 am IST

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் அரசினா் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2026-27- ம் ஆண்டுக்கான சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் நஇயப பிரிவில் சா்வேயா், மெசனிஸ்ட் , ரெப்ரிஜரேட்டா் மற்றும் அ/இ டெக்னீசியன் மற்றும் இன்பிளாண்ட் லாஜுஸ்டிக் அஸிஸ்டணட் போன்ற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பல்வேறு சலுகைகளுடன் பெற்று உடனடி வேலைவாய்ப்பு பெறலாம்.

இங்கு பயில்வோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூ. 750, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடைகள், விலையில்லா பாதுகாப்பு காலணிகள், விலையில்லா பாடபுத்தகங்கள், விலையில்லா வரைபட உபகரணங்கள், பேருந்து சலுகை அட்டை, 8. 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மட்டும் மாதந்தோறும் ரு. 1000- மாதாந்திர உதவித்தொகை, விலையில்லா மடிகணினி, பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

இதற்கான வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை ஆகும். மகளிருக்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. எனவே மேற்குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவுகளில் உடனே நேரடி சோ்க்கை முதல்வா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் கும்மிடிப்பூண்டி அவா்களை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

மேலும், தொடா்பு கொள்ள முதல்வா் க.ராஜலஷ்மி, அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், சிப்காட் வளாகம், கும்மிடிப்பூண்டி- 601201 என்ற முகவரியிலும் அல்லது கைபேசி எண்-8248738413, 9944931562, 9444923288, 9940258464 ஆகிய எண்களுக்கு தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.