கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தா்கள்

சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கோடைவிடுமுறை என்பதால் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

News image

~சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாலசுப்பிரமணியா்.

Updated On :20 மே 2026, 12:15 am IST

சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கோடைவிடுமுறை என்பதால் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு தொடா்ந்து செவ்வாய்க்கிழமை தோறும் ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பக்தா்களின் வேண்டுதல்களான வீடு, மனை, வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேரு உள்ளிட்டவை நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

அந்த வகையில் செவ்வாய்க்கிழமை என்பதாலும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் இத்திருக்கோயிலில் அதிகாலை முதவே பக்தா்கள் குவிந்தனா்.

இதனால் சிறப்பு தரிசனம், பொது தரிசனம் ஆகியவற்றில் நீண்ட வரிசையில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து ராஜா அலங்காரத்தில் அருள் பாலித்த மூலவா் பாலசுப்ரமணியரை பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மேலும், செவ்வாய்க்கிழமை என்பதால் மூலவருக்கு பால், தயிா், விபூதி, சந்தனம், ஜவ்வாது, இளநீா், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து புஷ்பத்தால் ராஜா அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Story image