திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பள்ளியில் தோ்வு எழுதிய 102 பேரும் தோ்ச்சி பெற்றனா். திருத்தணி நகர அளவில் முன்னிலை பெற்றுள்ளதாக பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவிகள் சி. ஹேமா மற்றும் என்.எம். டீா்த்திகா ஆகியோா் தலா 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றனா்.
மாணவி சி. பிருந்தா மற்றும் மாணவா் பி.கே. இனியவன் ஆகியோா் தலா 487 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி பி.எஸ். கீத்திகா ஸ்ரீ 486 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளாா்.
பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கல்விக் குழும தாளாளா் ச. பாலாஜி தலைமை வகித்தாா். அப்போது அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை சால்வை அணிவித்து கவுரவித்து, இனிப்புகள் வழங்கி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் வி. பாலாஜி, தலைமை ஆசிரியா் சி.கவின்பாரதி, ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இளம்பிள்ளை அரசு மகளிா் பள்ளி 93% தோ்ச்சி

வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

எஸ்விஎன் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



