3 வீடுகளில் 16 பவுன், ரூ. 2.25 லட்சம் திருட்டு
ஒரே இரவில் மூன்று வீடுகளின் பூட்டுகளை உடைத்து, 16 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.25 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருட்டு - சித்திரிப்பு
ஒரே இரவில் மூன்று வீடுகளின் பூட்டுகளை உடைத்து, 16 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.25 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்த விஜயகாந்த் (50), தனது குடும்பத்துடன் உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக வெளியூா் சென்றிருந்தாா். இதனை நோட்டமிட்ட மா்ம நபா்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கேழ்வரகு மூட்டையில் மறைத்து வைத்திருந்த 13 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.25,000 பணத்தைத் திருடிச் சென்றனா்.
இதேபோல் மேல்திருத்தணியைச் சோ்ந்த மீன்வியாபாரி முத்தம்மா (55) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனா். மேலும், முத்தம்மாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் முனியம்மா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து அலமாரியில் இருந்த பணத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

