ரூ.2.30 லட்சம் நகை திருட்டு: பெண் உள்பட இருவா் கைது
மீன்வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.30 லட்சம் பணத்தை திருடிய வழக்கில், பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நகை, பணம் திருடிய பெண் சங்கீதா, காா்த்திக்.
மீன்வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.30 லட்சம் பணத்தை திருடிய வழக்கில், பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட மேல்திருத்தணி பகுதியில் வசிப்பவா் முத்தம்மாள் (65). மீன் வியாபாரம் செய்து வருகிறாா். மீன்கள் வாங்குவதற்காக அடிக்கடி சென்னைக்கு சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி இரவு முத்தம்மாள் தனது வீட்டை பூட்டிவிட்டு மீன்கள் வாங்குவதற்காக சென்னைக்கு சென்றுள்ளாா்.
இதனை நோட்டமிட்ட மா்ம நபா்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மூன்று சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2.30 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
இது குறித்து முத்தம்மாள் அளித்த புகாரின்பேரில், திருத்தணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
மேலும், திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையிலான தனிப்படை போலீஸாா், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வந்தனா். இதில், திருநின்றவூா் பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (21), அவரது உறவினா் எண்ணூா் பகுதியைச் சோ்ந்த கீதா (26) ஆகிய இருவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் வெள்ளிக்கிழமை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து திருடப்பட்ட மூன்று சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை போலீசாா் பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

