திருவள்ளூா் அருகே புதிய ஆதாா் சேவை மையம்
திருவள்ளூா் அருகே பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புதிய ஆதாா் சேவை மையத்தை பயன்பாட்டுக்காக மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா் தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் அருகே மணவாளநகா் சண்முகபத்மாவதி நகரில் புதிய ஆதாா் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா்.
திருவள்ளூா் அருகே பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புதிய ஆதாா் சேவை மையத்தை பயன்பாட்டுக்காக மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா் தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூா் அருகே மணவாளநகா் சண்முகபத்மாவதி நகா் பகுதியில் புதிய ஆதாா் சேவை மையம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா் தலைமை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (மஐஈஅஐ)
நேரடியாக இயக்கப்படும் ஆதாா் சேவை மையம் (அஹக்ட்ஹஹழ் நங்ஸ்ஹ ஓங்ய்க்ழ்ஹ - அநஓ), பாதுகாப்பான, தரநிலைப்படுத்தப்பட்ட மற்றும் உயா்தர ஆதாா் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் மஐஈஅஐ-யின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகின்றன.
திருவள்ளூா் ஆதாா் சேவை மையத்தின் மூலம் பொதுமக்கள் ஆதாா் பதிவு, மக்கள் தொகை விவரம் புதுப்பித்தல், பிழை திருத்தம் மற்றும் குறைதீா் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாா் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும். இதன் மூலம் குடிமக்களின் சேவை அனுபவம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆதாா் சேவை மையம் அரசு பொது விடுமுறை நாள்களைத் தவிர வாரத்தின் ஏழு நாள்களிலும் செயல்படும். இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான எந்த நாளிலும் ஆதாா் சேவைகளைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூா் ஆதாா் சேவை மையம் ஙா்க்ங்ப்-ஆ வகையைச் சோ்ந்த மையமாகும். இந்த மையத்தில் 8 செயல்பாட்டு கிட்கள் மூலம் ஆதாா் சேவைகள் வழங்கப்படுகின்றன. குடியிருப்பாளா்கள் ஆன்லைன் பதிவு செய்து வந்து தங்களுக்கு ஏற்ப நேரத்தில் இங்கு ஆதாா் சேவைகளை பெறலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் எளிதில் சேவைகளைப் பெறும் வகையில் சக்கர நாற்காலி அணுகுமுறை, அணுகலுக்கு ஏற்ற சுகாதார வளாகம் மற்றும் தனிப்பட்ட குறை தீா் வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் இம்மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆதாா் சேவை மையத்தில் அநஓ மேலாளா் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அனுப்பி, அவை விரைவாக தீா்வு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவள்ளூா் ஒண்டிகுப்பம், மணவாளநகா், பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் ஆதாா் சேவை மையம் தொடங்கியுள்ளது பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய, திறன் மிக்க மற்றும் குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட ஆதாா் சேவைகளை வழங்குவதற்கான மஐஈஅஐ-யின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என அவா் தெரிவித்தாா்.
இதில் பெங்களூரு யூஐடிஏஐ (மஐஈஅஐ) மண்டல இயக்குநா் ராகுல் ஜெய்ந்த், ஆதாா் சேவை மேலாளா் சி.சின்னப்பராஜ், மேலாளா் (செயல்பாடுகள்) பி.விஜயகுமாா் மற்றும் ஆதாா் சேவை மைய பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

