திருவண்ணாமலையில் மாவட்ட வாலிபால் போட்டி தொடக்கம்

திருவண்ணாமலையில் வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியை தொடங்கிவைத்த முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ்.

திருவண்ணாமலையில் வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியை தொடங்கிவைத்த முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ்.

Updated On :

திருவண்ணாமலையில் வருவாய் மாவட்ட அளவில் மகளிருக்கான வாலிபால் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெ.செல்வகுமாா் தலைமை வகித்தாா்.

பள்ளி உதவி தலைமை ஆசிரியா்கள் பாபு, முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியை மனோன்மணி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா்.

உடற்கல்வி இயக்குநா்கள் பின்னி கிறிஸ்டியான், சங்கா், உடற்கல்வி ஆசிரியா்கள் முத்துக்குமாரசாமி, ஸ்ரீதா், கணேஷ் பாபு, கிருஷ்ணமூா்த்தி, மகேஷ்குமாா், திருமூா்த்தி, சுரேஷ்பாபு, அப்பு, கமாட்சி, சுந்தரம் ஆகியோா் நடுவா்களாக பணியாற்றினா்.

11 வட்டங்களில் இருந்து 19, 17, 14 வயதுக்கு உள்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 396 மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் முதலிடம் பிடிக்கும் 19 வயதுக்கு உள்பட்டோா்அணி மதுரையிலும், 17 வயதுக்கு உள்பட்டோா் அணி திண்டுக்கல்லிலும், 14 வயதுக்கு உள்பட்டோா் அணி கன்னியாகுமரியிலும் இம்மாதம் இறுதியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிறைவில் உடற்கல்வி இயக்குநா் பி. செளமியா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.