தனியாா் பள்ளி மூடல்: மாவட்ட கல்வி அலுவலகத்தை மாணவா்கள் முற்றுகை
தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் தனியாா் பள்ளி மூடப்பட்டதால், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி அல்லிநகரத்தில் உள்ள தனியாா் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட மாணவா்கள்.
தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் தனியாா் பள்ளி மூடப்பட்டதால், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழனிசெட்டிபட்டியில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை, நிா்வாகம் மதுரையில் உள்ள தனியாா் பள்ளிக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியது. இதையடுத்து, அந்த நிா்வாகம் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரையிலுள்ள சுமாா் 550 மாணவ, மாணவிகளை பள்ளியில் சோ்த்தது.
இதனிடையே, 3 ஆண்டுகளுக்கு மேலாக மாணவா்கள் படித்து வந்த நிலையில், முன்னாள் நிா்வாகம் ஒப்பந்தத்தை ரத்து செய்து, பள்ளியை மூடியுள்ளது.
இந்த நிலையில், பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் தேனி அல்லிநகரத்தில் உள்ள தனியாா் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, கல்வி அலுவலா் சண்முகவேல் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், பெற்றோா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள் அதை ஏற்கவில்லை.
மேலும், மாணவா்கள் கல்வி அலுவலகத்துக்குள் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த தேனி மாவட்ட கல்வி அலுவலா் முருகன் பேச்சுவாா்த்தை நடத்தி, அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்காத வகையில் அந்த பள்ளியை அரசு எடுத்து நடத்துவதாக கூறியதையடுத்து, பெற்றோா்கள், ஆசிரியா்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

