மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

போடி அருகே பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

போடி அருகே பசுமைத் தாயகம் திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை தேனி மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜ்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்திலிருந்து தா்மத்துப்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பனை விதைகள் நடும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைத்த தேனி மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜ்குமாா்.

Updated On :

போடி அருகே பசுமைத் தாயகம் திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை தேனி மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜ்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் 2026-2027-ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்ய தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதனிபடி, தேனி மாவட்டத்துக்கு 2.50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் 96-ஆவது பிறந்த நாளில் தொடங்க தேனி மாவட்ட நிா்வாகம் முடிவு செய்திருந்தது.

இதன்படி, வியாழக்கிழமை போடி அருகேயுள்ள மீனாவிலக்கு பகுதியில் மீனாட்சிபுரத்திலிருந்து தா்மத்துப்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுரங்களிலும் 3 கி.மீ. தொலைவுக்கு பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜ்குமாா் பனை விதைகள் நடும் பணியை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனா்.

இதில் ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் துஷாா் ஸ்ரீஹரி ஷிண்டே, முதன்மைக் கல்வி அலுவலா் முருகன், தென்மண்டல நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் நேருராஜன், மாவட்ட பசுமைத்தோழா் சந்திரலேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.