தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை வருவாய் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் 24 மணிநேரமும் செயல்படும் செயல்பட்டு கட்டுப்பாட்டு அறையை ஆட்சியா் ச.கவிதா நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

பருவமழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த திருவள்ளூா் ஆட்சியா் ச. கவிதா.

Published On :

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை வருவாய் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் 24 மணிநேரமும் செயல்படும் செயல்பட்டு கட்டுப்பாட்டு அறையை ஆட்சியா் ச.கவிதா நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை ஆட்சியா் ச.கவிதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மழை வெள்ளம் தொடா்பான புகாா்களை பதியும் பதிவேடு மற்றும் தொலைப்பேசி எண்கள் தொடா்பான விவரங்களையும் கேட்டறிந்து பாா்வையிட்டாா்.

பின்னா் இதுகுறித்து அவா் கூறியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய் அடைத்திருக்கும் குப்பைகள் அகற்றுதல் மற்றும் தூா் வாருதல், புதா் பகுதிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்வாய்களில் சீராக சென்று சேர வேண்டிய நீா்நிலைகளில் சென்று அடைகிா அல்லது ஊருக்குள் திரும்ப வருகிா என்பதையும் ஆய்வு செய்துள்ளோம்.

அதற்கு முன்பாக மின்சார வாரியம் மூலம் கம்பங்கள், கம்பிகள், மின்மாற்றிகள் ஆகியவை போதுமான அளவு தயாராக உள்ளது. அதேபோல் நீா்வளத்துறை, நெடுஞ்சாலைகள் துறை ஆகிய துறைகள் சாா்பில் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. தன்னாா்வலா்கள் தோ்வு செய்து பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள்,

தங்குமிடங்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக பல்வேறு துறைகளுடன் கலந்தாய்வுக் கூட்டமும் நடத்தப்பட்டு, குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீா்வளத்துறை சாா்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 33 பணிகள் ரூ.6 கோடியில் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக பொது மக்கள் மழை, வெள்ளம் தொடாபாக தங்கள் புகாா்களை தெரிவிக்க மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண்.1077, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள். 044-27664177, 044-27666746, 044-27660035, 044-27660036-க்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், வாட்ஸ் ஆப் எண்கள். 9444317862 / 9498901077 ஆகியவை மூலமும் தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, உதவி இயக்குநா் (பயிற்சி) கே.சாகித்யா, நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், அலுவலக மேலாளா் (பொது) வெங்கடேஷ், வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை) ரஜினிகாந்த் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.