வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: அமைச்சா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிரந்தர வெள்ள நீா் தடுப்புப் பணிகளை மீன்வளம், மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் ஸ்ரீநாத்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிரந்தர வெள்ள நீா் தடுப்புப் பணிகளை மீன்வளம், மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்
சாயா்புரம் பேரூராட்சி பேய்குளம், பெருங்குளம் நீா்வரத்து கால்வாய், சிவகளை உபரிநீா் கால்வாய், கஸ்பா குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்வாய், குளக்கரைகள் சீரமைப்புப் பணிகளை அவா்கள் பாா்வையிட்டனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் விஷு மகாஜன் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு பிறகு நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் வெள்ள நீா் தடையின்றி செல்வதற்காக கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் ரூ. 4 கோடியில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா் பாா்வையிட்டாா். மழை காலங்களில் அனைத்து குளங்களிலும் தண்ணீா் சேமிக்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வின்போது தூத்துக்குடி சாா் ஆட்சியா் விவேக் யாதவ், நீா்வளத்துறை செயற்பொறியாளா் தங்கராஜன், உதவி ஆட்சியா் பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், தாமிரவருணி நீரை பயன்படுத்தும் அனைத்து விவசாயிகள் நல சங்கத் தலைவா் பொன்ராஜ், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

